மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்கு உளமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் !

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை உயர்தரப் பரீட்சை 2,204 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.

பரீட்சார்த்திகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பிலும் அவர் தெளிபடுத்தினார்.

பரீட்சை மு.ப 8.30 ஆரம்பமாகுவதால் பரீட்சார்த்திகள் மு.ப 8 மணிக்கு முன்னர் பரீட்சை மண்டபவத்திற்கு வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பரீட்சார்த்திகள் பரீட்சை அனுமதிப்பதிரம்,தேசிய அடையாளஅட்டை அல்லது கடவுச்சீட்டினை பரீட்சை மண்டபத்தில் கட்டாயம் எடுத்துவருதல் வேண்டும்.

இம்முறை க.பொ.த உயர் தரப்பரீட்சையில் 315,605 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், இவர்களில் இரண்டு இலட்சத்து 40,991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும்,74,614 வெளிவாரி பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார சுட்டிகாட்டினர்.

மேலும் பரீட்சை மண்டபத்தினுள் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் , கலுகலேட்டர் என்பன பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறு பாவிப்போருக்கு ஐந்து வருடங்களுக்கு பரீட்சை தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *