உயர்தரப் பரீட்சையில் நான் விட்ட தவறுகளை என் பாசச் சகோதரர்கள் விடக்கூடாது என்ற அவாவில் சில அறிவுரைகள்…

உயர்தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தியுடன் உயரப் பறந்திட என் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் முதற்கண் வாழ்த்துக்கள்…

கடந்த வருடம் இந்நேரம் நான் பரீட்சை மண்டபத்தில் நடுநடுங்க அமர்ந்திருந்த நினைவுகள் இன்னும் நினைவுகளில் நிழலாடச் செய்ய, அந்நேரம் நான் விட்ட தவறுகளை என் பாசச் சகோதரர்கள் விடக்கூடாது என்ற அவாவில் சில அறிவுரைகள்…

01- காலையில் எழுந்ததும் மனதை ஒரு நிலைப்படுத்தி சிந்தனைகளை நல்லதாய் அமைத்துக் கொள்ளுங்கள்.

02-வினாத்தாள் எப்படி இருக்குமோ, நான் சரியாக விடை கொடுப்பேனோ என்ற எண்ணம் வேண்டாமே வேண்டாம்.

03-பரீட்சை மண்டபத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டு உறவினர்கள், ஆசிரியர்களுடன் தொலைபேசியிலோ, நேரடியாகவோ கதை தேவையில்லை. ஏன் எனில் “உன்னைத் தான் நம்பியிருக்கன், நன்றாக Exam செய்” அப்படி இப்படி அவர்களின் பேச்சுக்களால் உங்களுக்கு இன்னும் பயம் உருவாகும்.

04-மண்டபத்திற்கு போனதும் நண்பர்களோடு சேர்ந்து படித்த விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடல் செய்யாதீர்கள். அங்கு நீங்கள் படிக்க மறந்த விடயம் ஒன்று பேசப்பட்டால் இன்னும் பதற்றம் கூடும்.

05-வினாத்தாள் கை எடுத்ததும் விடைகளை பார்க்கும் அவசரத்தை விட்டு 05நிமிடம் இறைவனை மனதில் நிறுத்தி அவனிடம் பொறுப்பு சாட்டுங்கள்.

06-எல்லா வினாக்களையும் வாசித்து உங்களால் சிறப்பாக விடை கொடுக்க முடியுமான கேள்விகளுக்கு முறைப்படி அடையாளமிட்டுக் கொள்ளுங்கள்.

07-வினாக்கள் கஷ்டமாக இருந்தால் பிறரிடம் கேட்டு தெரிந்து கொள்வதில் வீணாக நேரத்தைக் கட்த்தாமல் உங்களுக்கு தெரிந்தபடி விடையளிக்கப் பாருங்கள்.

08-ஒவ்வொரு கேள்விகளுக்கும் நேரம் பிரித்து அந்த நேரத்திற்குள் விடை வழங்க முடியுமானவரை முயற்சி செய்யுங்கள்.

09-நேரத்துக்கு முன் எழுதி முடித்தால் பிறருக்கு தொல்லை இன்றி மீண்டும் மீண்டும் நீங்கள் எழுதியதை வாசித்து குறைகள், விடுபட்ட இடங்கள் இருந்தால் அதை பூர்த்தி செய்யுங்கள்.

10-வினாத்தாள் கொடுக்கும் முன்பு சரியாக ஒழுங்குமுறைபடி அனைத்து விடைத்தாள்களையும் கட்டி சுட்டிலக்கம் எல்லாம் மீண்டும் ஒரு முறை பரீட்சிக்கத் தவறாதீர்கள்.

11-வீட்டுக்கு வந்ததும் அன்றைய நாளை மறந்து அடுத்த பாடத்துக்காய் பூரணமாக உம்மை தயார்படுத்துங்கள், எழுதியதை சிந்திக்காமல் எழுதப் போவதை சரிப் படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையே பெரும் பரீட்சையாக இது என்ன?? இலகுவாய் எண்ணி, மனதை சரிப் படுத்தி, வெற்றி பெற இறைவன் உங்கள் அனைவருக்கும் துணை நிற்பானாக!!!

Aathifa Ashraf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *