JM MEDIA என்றால் என்ன?

JM MEDIA என்றால் என்ன?
இங்கு நடைபெறும் பயிற்சிநெறி எப்படி இருக்கும்?
என்னென்ன விடயங்கள் படித்துத் தருவார்கள்?
இப் பயிற்சி முடிவில் என்ன செய்யலாம்?? என்றெல்லாம் அடுக்கடுக்காய் கேள்விகள் மலைபோல் எம் inbox ஐ நிறைத்த வண்ணம் இருக்க அனைவருக்கும் சேர்த்து ஒரு சிறிய அறிமுகத்தைக் கொடுக்கலாம் என நினைக்கின்றோம்.

“JM MEDIA” என்றால் ??Justice Moral Media?? என்று பொருள்படும். அதாவது நீதியும், ஒழுக்கமும் நிறைந்த ஒரு நிறுவனமே இந்த JM MEDIA வாகும்.
எங்கள் நிறுவனம் பல் சேவைகளை இலவசமாகவும், தொழில் நோக்கிலும் சமூகத்துக்கு ஆற்றி வர, எதிர்கால சிறந்த ஊடகவியளாலர்களை உருவாக்கும் நற்கனவோடு 03மாத ஊடகப் பயிற்சி நெறியைத் திறமையான, பெயர்போன ஊடாகவியளாலர்களை வளவாலர்களாகக் கொண்டு நடாத்தி வருகின்றது.

அதன்படி இலங்கைக் கொழும்பு பல்கலைக்கழகத்தினதும், இந்தியா மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தினதும் பாடத்திட்டங்களை வகுத்து, தொகுத்து தனது பயிற்சி நெறியை மிகச் சிறப்பாக செயற்படுத்தி வருகின்றமை மகிழ்ச்சியே,
இங்கு பாடப்பரப்பில் உள்வாங்கப்படும் விடயங்கள் யாதென்று படிமுறைப்படி நோக்குவோமாயின்…
?ஊடகத் துறை வரலாறு (History of Journalism)
?ஊடக ஒழுக்கக் கோவை, அது தொடர்பான விடயங்கள்.
?ஊடகத்துறையில் பிரவேசிப்பதும் ஆங்கு தொடர்ந்து நிலைப்பதற்குமான ஆலோசனைகள்.
?செய்தி வாசிக்கும், தயாரிக்கும் நுட்பங்கள்
?அறிவிப்புத் துறை சார் வழிகாட்டல் (Stage Announcement)
?படம்பிடிப்பு (Photography with Field TRIP)
?Audio, Video editing
? Short Film & Documentary Making
?தொழில் வழிகாட்டல்கள் (பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மூன்றுக்குமான வழிகாட்டல்கள்)
போன்ற இன்னும், நவீன உலகில் அவசியம் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டிய சகலருக்குமான பயன் தரும் பல் விடயங்கள் உள்வாங்கப் பட்டுள்ளன.

அதிலும் விசேடமாக இப் பயிற்சி நெறி முடிவில் அங்கீகாரம் பெற்ற Advance Certificate in MASS MEDIA சான்றிதழ் வழங்கப்படுவதோடு, திறமையான மாணவர்களுக்கு JM MEDIA நிறுவனத்திலேயே தொழில் வாய்ப்புக்களும் வழங்கப் படும்.
மேலும் அரச, தனியார் ஊடகங்களில் பிரவேசிக்க விரும்பும் சகலருக்கும் அங்கு சென்றது முதல் நேர்காணல் (Interview) முகம் கொடுத்து ஊடகத்துறையில் சாதிப்பது வரை சகல வழிகாட்டல்களும் முன்ஆயத்தங்களும் இங்கு வழங்கப்படும்.

மிகவும் குறைந்த கட்டணத்தில், எதிர்கால தலைசிறந்த ஊடகவியாளாலர்களை உருவாக்கும் நற்கனவில் செயற்படும் எம் அன்னை JM MEDIA வில் இணைத்து, படிக்கும் வாய்ப்பு உங்களுக்கும் கிட்டுமானால் உங்கள் ஊடகத்துறைக் கனவு நிச்சயம் கைகூடும் என்பதற்கு JM MEDIA வின் பழைய மாணவர்களாகிய நாங்களே சாட்சி.
நன்றி

இப்படிக்கு
இவள் அன்னை JM MEDIA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *