முச்சக்கர வண்டி பாகங்களை திருடி விற்பனை செய்த மூவர் கைது

முச்சக்கர வண்டிகளின் பாகங்களை திருடி விற்பனை செய்து வந்த மூன்று சநதேகநபர்கள் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்களினால் விற்பனை செய்யப்பட தயாராகவிருந்த ஐந்து முச்சக்கர வண்டிகளின் பாகங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவ்வாறு பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 12 முச்சக்கர வண்டிகள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்குளி , களனி மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளை சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *