வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை ஞாபகமூட்டி கௌரவித்தல்

கடந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச ஊடகவியலாளர்களுக்கு உதவும் நோக்கிலும் அவர்களை கௌரவிக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி நேற்று 19.07.2016 அன்று காலை 10.00 மணியளவில் கொழும்பு அல் ஹிதாயா பாடசாலையில் இடம்பெற்றது. இதனை கலாசார மற்றும் அபிவிருத்திக்கான முஸ்லிம் நிறுவனம் (MFCD) ஏற்பாடு செய்திருந்தது. இன, மத, மொழி பேதமின்றி, கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சகலரும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது, அஷ்ஷெய்க் முனீர் முளப்பர் விசேட அதிதியாக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். MFCD தலைவர் ஹனான் ஹுஸைன், ஜமாஆதுஸ் ஸலாமாவின் செயலாளர் ரயீசுல் இஸ்லாம், மீளபாரவை பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் என பலரும் கலந்துகொண்டனர்.

தமது தேவைகளுக்கு எங்களை அழைக்கின்ற அம்வுகளுக்கே நாம் சென்றிருக்கிறோம். நாங்கள் கலந்துகொண்ட எங்களுக்காக ஒன்றுகூட்டிய நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல் அமர்வு இதுவாகும் என வருகை தந்த ஊடகவியலாளர்கள் கருத்துத் தெரிவித்ததோடு MFCD நிறுவனத்திற்கு தமது நன்றிகளையும் தெரிவித்தனர்.

முஜாஸ் அலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *