கோதபாய காலத்தில் அரச நிறுவனங்களில் படையதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் குறித்து விசாரணை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ பதவியில் இருந்த காலத்தில் அரச நிறுவனங்களில் படையதிகாரிகளுக்கு வழங்கிய நியமனங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் கோதபாய ராஜபக்ஸ பாதுகாப்புச் செயலாளராகவும், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார். இந்தக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களில் படை அதிகாரிகள் பலருக்கு சிரேஸ்ட பதவிகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த விடயங்கள் தொடர்பில் ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, மஹிந்த ஆட்சிக் காலத்தில் மக்கள் சொத்துக்கைள கொள்ளையிட்ட மற்றும் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்த அரச அதிகாரிகள் இந்த அரசாங்க ஆட்சியிலும் பதவி வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான அதிகாரிகள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *