மேல் மாகாண சபை உறுப்பினர் ரொஜர்’ருக்கு பிடியாணை ரத்து (Update)

மேல் மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரத்னவிற்கு விடுத்திருந்த பிடியாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் நீதிமன்றில் ஆஜராகியமையைத் தொடர்ந்து இவருக்கு விதிக்கப்பட்ட பிடியாணையை நீதவான் இரத்து செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேல் மாகாண சபை உறுப்பினர் ரொஜர்’ருக்கு பிடியாணை

மேல் மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிடியவால் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அது , தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்ட காவற்துறை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதாகும்.

கடந்த பெப்ரவரி 6ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஸைத் ராட் அல்-ஹுசைன் இந்நாட்டிற்கு வருகை தந்திருந்த போது ஐக்கிய நாடுகள் சபையின் இந்நாட்டு அலுவலகத்தின் முன் ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

(riz)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *