மாவனல்லைஅரநாயக்க தேடுதல் பணிகள் பூர்த்தி

மாவனல்லை அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணிகள் இன்றைய தினம் நிறைவுக்குக்கொண்டு வரப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே இராணுவத்தினர் குறித்த பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
மண் சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் நோக்கில் இந்த மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

30 அடிக்கு மேல் மண் மூடப்பட்டிருப்பதாகவும், சம்பவம் இடம்பெற்று பல நாட்கள் கடந்துள்ளதாகவும் இதனால் எவரும் உயிருடன் இருக்கக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இன்றைய தினம் தேடுதல் பணிகளை உத்தியோகபூர்வமாக முடித்துக் கொள்வதாக மீட்புப் பணிகளுக்கு பொறுப்பாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, அரநாயக்கவில் வைத்து தெரிவித்துள்ளார்.

கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைய தேடுதல் பணிகள் உத்தியோகபூர்வமாக இன்றைய தினத்துடன் பூர்த்தி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் தற்காலிக விடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *