முன்னாள் நீதவான் திலின கமகேவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

முன்னாள் நீதவான் திலின கமகேவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கங்கொடவில நீதவான் கனிஸ்க விஜேரட்ன, திலின கமகேவிற்கு பிணை வழங்கியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை வைத்திருந்ததாக திலின கமகே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 500,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 2.5 மில்லியன் ரூபா அடிப்படையிலான நான்கு பிணைகளின் அடிப்படையில் திலின கமகேவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும், மாத இறுதியின் ஞாயிற்றுக் கிழமைகளில் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திலின கமகே இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். சகுரா என்று அழைக்கப்படும் யானைக் குட்டியொன்றை கடந்த 2015ம் ஆண்டு ஆரம்பத்தில் மீட்டிருந்தனர். இந்த யானைக் குட்டியின் பெறுமதி 6.9 மில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

நல்ல எண்ணத்தில் யானையை கொள்வனவு செய்ததாகவும், அனுமதிப்பத்திரம் அற்ற யானைக் குட்டியென்று தமக்கு தெரியாது எனவும் முன்னாள் நீதவான் திலின கமகே நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *