4.68 மில்லியன் ரூபா இழப்பீடு – ஜனாதிபதி உத்தரவு

ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 33 பேருக்கு இழப்பீடு வழங்குவதற்காக 4.68 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு ஜனாதிபதி அனுமதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அதன்படி, எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கி வைக்கவுள்ளார்.

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் அராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுக்கு அமைய ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *