17 வயதான சிறுமியின் சடலம்: மரணத்தில் மர்மம் நீடிக்கிறது

மட்டக்களப்பு – திருப்பெருந்துறை பகுதியில் நீர் நிரம்பிய குழியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணம் குறித்து தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்றது.

குறித்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில்
உள்ளடக்கப்பட்ட விடயங்களை அறிந்துகொள்வதற்காக நாம் முயற்சித்த போதிலும் அது கைகூடவில்லை.

திருப்பெருந்துறையில் நீர் நிரம்பிய குழியொன்றிலிருந்து கடந்த 28 ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம், மட்டக்களப்பு பாரதிபுரம் பகுதியைச் சேரந்த 17 வயதான சிறுமியுடையது என அடையாளம் காணப்பட்டது.

அச்சிறுமி மட்டக்களப்பின் சிறுவர்கள் விடுதியொன்றில் தங்கியிருந்து கல்வியைத் தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *