INTI சர்வதேச பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம்

INTI சர்வதேச பல்கலைக்கழகம் மலேசியாவை தலைமையகமாக் கொண்டு இயங்கி வருகின்றது. சுமார் 6 பிரதான கிளைக் கொண்டு இயங்கி வரும் INTI சர்வதேச பல்கலைக்கழகம்

 இலங்கையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் கொண்ட குழுவை மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம் ஒன்றினை மலேசியா INTI பல்கலைக்கழகம் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பாடு செய்து இருந்தது. இலங்கையில் இருந்து சுமார் 8 பேர் கலந்து சிறபித்த இந்த சுற்று பயணத்தில் பல நாடுகளிலுமிருந்நு சுமார் 30  பிரதி நிதிகள்  கலந்து கொண்டனர்.

இந்த சுற்றுலாவின் போது சுபங், கோலாலம்பூர், நிலாய், பிணங் போன்ற இடங்களில் அமைந்துள்ள INTI பல்கலைக்கழகங்ளில் உள்ள வளங்கள், பயிற்சி நெறிகள், எவ்வாறான பயிற்சியளிப்பு முறைகள் இருக்கின்றன என்பன பற்றி தரிசித்து நோக்கபட்டது.

கலந்து கொண்டவர்களுக்கு ,பயிற்சிகள், கலந்துரையாடல்கள், செயலமர்வுகள் உட்பட பல முக்கிய இடங்களை தரிசித்தல் போன்ற பல சிறப்பான விடயங்களும் இடம் பெற்றன. முக்கியமாக மலேசியாவின் உயர் கல்வி அமைச்சிலும் சிறந்த வரவேற்பு அளித்துடன்  மலேசியாவில் உயர் கல்வி கற்பதன் அனுகூலங்கள் போன்ற விடயங்கள் ஆராயபட்டன.

அத்துடன் பிரதிநிதிகள் அனைவரும் மலேசியாவின் புகழ் பெற்ற KL கோபுரம், பட்டு குகை, புத்ராஜெயா பள்ளிவாயல், அதி உயர் கட்டிடம், பிணங் தீவு போன்ற இடங்களுக்கும் அழைத்து செல்லபட்டனர்.

INTI பல்கலைக்கழகம் American Degrees, Art & Design, Bio Technology & Life Sciences, Business, Computing & IT, Engineering, Health Sciences, Hospitality & Culinary Arts, Law, Mass Communication  போன்ற அங்கிகாரம் பெற்ற பட்ட படிப்புக்கள், பட்டப் பின் பாட நெறிகளை வழங்குகிறது.

INTI பல்கலைக்கழகத்தில் கற்ற 99% மாணவர்கள் 6 மாதங்களில் தொழில் வாய்ப்பினை பெறுகின்றனர். 91% சராசரி உயரிய சம்பளத்தை பெறுகின்றனர். 60% மாணவர்கள் தொழில் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றனர். அனைத்து நிகழ்வுகளையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த INTI பல்கலைக்கழக நிருவாகதினருக்கும் மற்றும் கிவ்ஸ்டடி நிருவாகத்தினருக்கும் நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image