மாவனல்லை  ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு

மாவனல்லை ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் இலவச செயலமர்வான (ACHIVE More) ஊடக செயலமர்வு மாவனல்லை  ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் நடைபெற்றது.
அஷ்ஷேய்க் கியாஸ் நளீமி தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக செயலமர்வில்  ஜே.எம் மீடியா நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவ பணிப்பாளருமான ஊடகவியலாளர் ராஷிட் மல்ஹர்தீன் சிறப்பு  விரிவுரை நிகழ்த்தினர்.
செயலமர்வில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு மேடை அறிவிப்பு மற்றும் நிகழ்ச்சி தொகுப்பு சம்பந்தமான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் ஆக்கபூர்வமான சமர்பித்தல் சம்பந்தமான செயன்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன. அத்தோடு இணைந்ததாக உபகரணங்களை கையாள்வது தொடர்பிலும் கையடக்க தொலைபேசியில் புகைப்படக்கலை நுனுக்கங்களும் கற்பிக்கப்பட்டமை குறுப்பிடத்தக்கது.
 
பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி விரிவுரையை ஜே.எம் மீடியா நிறுவனத்தின் பொது முகாமையாளரும் ஆசிரியருமான ரஸா  மல்ஹர்தீன் வழங்கினார்.
இச்செயலமர்வில் ஜே.எம் மீடியா குழு உறுப்பினர்களான முஹம்பத் முனாஸ், அம்ஹர் அமீர் உட்பட ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
செயலமர்வில் கலந்து கொண்ட சுமார் 200 மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவனல்லை ஜே.எம் மீடியாவின் கல்விச் சேவை பிரிவின் ஒரு செயற்திட்டமான Achieve MORE செயலமர்வு, நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள,
அரபுக்கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் இலவசமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான செயலமர்வுகளை நடத்த வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள் 0777 362 492 அல்லது  0777 162 511

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image