கல்எலிய அலிகார் மகா வித்தியாலயத்தில் இலவச ஊடக செயலமர்வு

மாவனல்லை ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் இலவச செயலமர்வான (Achieve MORE) ஊடக செயலமர்வு கல்எலிய அலிகார்; மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாடசாiயின் அதிபர் திருமதி எம்.ஏ.ஐ நிஸ்வாவின் தலைமையில் நடைபெற்ற ஊடக செயலமர்வில் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி எஸ் எப். யூ உல்பத் வரவேற்புரையாற்றினார்.

ஜே.எம் மீடியா நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவ பணிப்பாளருமான ஊடகவியலாளர் ராஷிட் மல்ஹர்தீன் சிறப்பு விரிவுரை நிகழ்த்தினர்.

செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அறிவிப்பு துறை சம்பந்தமான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் அறிவிப்பில் செயன்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன. மாணவர்களின் ஒழுக்க மேன்பாடு மற்றும் ஆளுமை விருத்தி சம்பந்தமான முக்கிய விரிவுரையை ஜே.எம் மீடியா நிறுவனத்தின் பொது முகாமையாளரும் ஆசிரியருமான ரஸா மல்ஹர்தீன் வழங்கினார்.

இச்செயலமர்வில் பாடசாலை அதிபர்; உட்பட பாடசாலையின் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். இதன் போது பாடசாலை மாணவர் ஊடகப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு அதற்கு பொருப்பாசிரியராக ஆசிரியர் ஜே.எம் ரிஸாம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

செயலமர்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாவனல்லை ஜே.எம் மீடியாவின் கல்விச் சேவை பிரிவின் ஒரு செயற்திட்டமான பாடசாலை மாணவர்களை ஊடகத்துறையில் பயிற்றுவிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் இநத ;செயலமர்வு இலவசமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊங்கள் பாடசாலையிலும் இவ்வாறான செயலமர்வுகளை நடத்த வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள் 0777 362 492 அல்லது 0777 162 511

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *