ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் இலவச ஊடக செயலமர்வு
மாவனல்லை ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள்
இலவச ஊடக செயலமர்வு (Achieve More) கனேதன்ன மதீனா முஸ்லிம் மகா
வித்தியாலயத்தில் நடைபெற்றது.
ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரஸா மல்ஹர்தீன்
தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக செயலமர்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர்
ஹூஸைன் மற்றும் ஜே.எம் மீடியா நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவ
பணிப்பாளருமான ஊடகவியலாளர் ராஷிட் மல்ஹர்தீன் ஆகியோர் விரிவுரை
நிகழ்த்தினர்.
செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஊடக விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன்
உபகரணங்களை கையாள்வது தொடர்பிலும் செயன்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
முhணவர்களின் ஒழுக்க மேன்பாடு மற்றும் ஆளுமை விருத்தி சம்பந்தமான விடயமும்
இதனுடன் இணைந்தாக நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.
இச்செயலமர்வில் மாவனல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ் நஜீப் பாடசாலை
அதிபர் கே.எம்.எஸ் மஹ்பூப் உட்பட பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர்
மற்றும் ஊடகப்பிரிவு ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
செயலமர்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள்
வழங்கப்பட்டன.
மாவனல்லை ஜே.எம் மீடியாவின் கல்விச் சேவை பிரிவின் ஒரு செயற்திட்டமான
பாடசாலை மாணவர்களை ஊடகத்துறையில் பயிற்றுவிக்கும் நோக்கில் நாடளாவிய
ரீதியிலுள்ள பாடசாலைகளில் இச்செயலமர்வு இலவசமாக நடைபெற்று வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
உங்கள் பாடசாலையிலும் இவ்வாறான செயலமர்வுகளை நடத்த வேண்டுமானால் தொடர்பு
கொள்ளுங்கள் 0777362492 அல்லது 0777162511