சுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

திஹாரி சுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா (30/06/2018) அன்று கள் எளிய, எமிரேட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வுகள் விடுகை வருட மாணவி ஷம்ரினா பர்தீன் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையும் தலைமையுரையும் அஷ் ஷெய்க் மௌலவி முஜீப் (கபூரி) வழங்கினார்.

தொடர்ந்து பட்டம் பெறும் மாணவி மௌலவியா ஹன்ஸா தௌபீக்கின் அரபுப் பேச்சும், அதனைத் தொடர்ந்து பிரதம அதிதி டாக்டர் மரீனா தாஹா ரிபாய் அவர்களின் உரையும் இடம்பெற்றது. பட்டம் பெறும் மாணவி மௌலவியா லுப்னா நஸ்ருல்லாஹ்வின் கவிதை ஒன்று இடம்பெற்றதுடன், தொடர்ந்து சிறப்புப் பேச்சாளர் S.H.M..இஸ்மாயில் (ஸலபி) அவர்களின் உரையும் இடம்பெற்றது. நன்றியுரையை மௌலவி முகர்ரம் (மதனி)  நிகழ்த்தினார்.

2015, 2016, 2017 ஆகிய விடுகை வருடங்களைச் சேர்ந்த 53 ஆலிமாக்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் பிரதம அதிதியாக அல் முஸ்லிமாத் நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் மரீனா தாஹா ரிபாய் அவர்களுடன், அதிதிகளாக Burles Paint Ltd இன் உரிமையாளர் அல் ஹாஜ் அப்துல் காதர், அதன் உதவிப் பணிப்பாளர் அல் ஹாஜ் இஸ்மாயில், வாமி நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.நஜ்மான் ஸாஹித் (நளீமி), Islamic Relief Committee இன் தலைவர் அல் ஹாஜ் மிஹ்லார், கள் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் உப அதிபர் அல் ஆலிமா மஹீஷா நஸ்ருல்லாஹ், அல் ஆலிமா பரீஹா இஸ்மாயில் (இஸ்லாஹியா), திஹாரிய ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ஷெய்க் அம்ஜத் (ரஷாதி), அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் இர்ஷான் மற்றும் அரபுக்கல்லூரியின் மாணவிகள், பெற்றோர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

JM MEDIA Production & College – 0777362492

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image