“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்

“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” எனும் கருப்பபொருளில் குருநாகல தம்பதெனிய அல் ஹைரியா அஹதிய்யா பாடசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும் ஜுன் மதாம் 07ம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு குருநாகல் தம்பதெனிய அல் ஹிஜ்ரா பாடசாலையில் நடைபெற்றது.
இப் பாராட்டு விழாவில்,

ஜே.எம் மீடியா ஊடக நிறுவனம் மற்றும் ஊடக கல்லூரியின் (JM Media Production and College) ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பளருமான ராஷித் மல்ஹர்தீன் (Raashid Malhardeen) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் நோன்பு மாதத்தில் நடைபெற்ற 10 நாள் ஸலாஹிய்யா சான்றிதழ் பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் பாராட்டுபெற்றவர்கள்,
1. கே.என் நிஷான் அதிபர் சேவையில் முதல் தரம் பெற்றமை
2. ரிப்னா சித்தீக் பல்கலைகழகவிரிவுரையாளராக நியமனம் பெற்றமை
3. வைத்தியர். சப்ரா சாபி யுனானி வைத்தியராக பட்டம் பெற்றமை
4. பஸ்ரினா பக்கீர் கல்எலிய அரபு கலாச்சார படிப்பை பூர்த்தி செய்தமை
5. சப்ரீன் தஸ்லீம் ஹாபிழ் ஆக பட்டம் பெற்றமை
6. நிஷாட் நிலாம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றமை

இந்நிகழ்விற்கு மாவனல்லை ஜே.எம் மீடியா ஊடக நிறுவனம் பூரண ஊடக அனுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image