சிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்

சிங்கள சினிமாவின் தந்தை என வர்ணிக்கப்படும் உலகின் சிரேஷ்ட இயக்குனரான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் 99 வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானதாக சினெஸ்டா மன்றத்தின் தலைவர் ஜெயந்த தர்மதாச தெரிவித்தார்.

1919 இல் பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராக செயற்பட்டு பின்னர் திரைத்துறையில் பிரவேசித்தார்.

1956 இல் இவரது முதலாவது திரைப்படமான ‘ரேகாவ’ திரைப்படம் வெளியாகியது.

2003 டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image