ஹபாயா விவகாரம் : முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இடமாற்றம்

மத்திய கல்வி அமைச்சினால் சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரி ஹபாயா விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ.விஜயானந்த மூர்த்தி தெரிவித்தார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற ஹபாயா விவகாரம் தொடர்பாக விஷேட கலந்துரையாடலொன்று இன்று (26) வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது வலயக்கல்வி பணிப்பாளர் என்.விஜேந்திரன் , பிரதி பொலிஸ்மா அதிபர் நிமால் பெரேரா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில கடுபிடிய, திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்‌ஷ அகில இலங்கை ஜம்யிய்யதுல் உலமா சபையின் திருகோணமலை நகரக்கிளைத்தலைவர் ஏ.ஆர்.பரீட் மௌலவி , திருகோணமலை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.வலீத் ஹாஜியார், என்.சீ.ரோட் பள்ளி தலைவர் எம்.வை.இல்யாஸ், நகர சபை உறுப்பினரான மௌசூன் மாஸ்டர், பிரதேச சபை உறுப்பினர் துவான் வஹார்தீன், திடிர் மரண விசாரணை அதிகாரி ரூமி மற்றும் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மதத்துடைய கலாச்சார விழுமியங்களை மதித்து புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டுமெனவும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை தொடர்பாக கரிகனையுடன் வாழ வேண்டுமெனவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது தாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர் எனவும், பாடசாலையின் சமய கலாச்சாரம் பேணப்பட வேண்டுமென தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பாடசாலை சார்பாகக் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image