கடுகண்ணாவ கற்குகைக்கு தற்காலிகமாக பூட்டு

வரலாற்று முக்கியத்துவம் மிக்க கடுகண்ணாவ கற்குகை சந்தியிலுள்ள கற்பாறையில் கீறல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்காலிகமாக இதனூடான வாகன போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கீறல் காரணமாக பாறையின் உட்பகுதியில் வெடிப்பும் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதே வேளை வீதி அபிவிருத்தி அதிகார சபை தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

1828 – 1830 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு கண்டி வீதி அபிவிருத்தியின் போது இந்த கற்பாறை வீதி நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image