மாவனல்லை சாஹிராவின் அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

சாஹிரா பாடசாலை மாவனல்லை – அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் வெஸ்டேர்ன் பிரிமியர் ஹோட்டலில் தலைவர் ஜனாப். பாயிஸ் ஹாஷிம் அவர்களது தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதான அததியாக மாவனல்லையை பிறப்படமாக கொண்ட மத்திய கிழக்கில் பிரசித்திபெற்ற டிஜிட்டல் டெக்னாலஜி துறையில் பல வருடங்களாக சேவை செய்துவரும் ஜனாப். கலீளுள் ரஹ்மான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்வில் அமீரக கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இப்போதுகூட்டத்தின் விசேட அம்சங்களாக பல நிகழ்சிகள் நடைபெற்றதோடு, 2018/19 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவும் நடைபெற்றது. இதன்போது, புதிய தலைவராக ஜனாப். ரிப்கான் ரவுப் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் இன்னும் 14 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

முழு நிர்வாக குழு விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

One thought on “மாவனல்லை சாஹிராவின் அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image