மாவனல்லை ஜே.எம் மீடியா சமூக வேவை பிரிவின் இன்னுமொரு செயற்திட்டம்
மாவனல்லை ஜே.எம் மீடியா நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஜே.எம் மீடியா சமூக வேவை பிரிவின் இன்னுமொரு செயற்திட்டமாக குருநாகல், தெலியாகொன்ன ஹிஸ்புல்லாஹ் தேசிய கல்லூரிக்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று திங்கற்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.
ஜே.எம் மீடியா நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பளருமான ராஷித் மல்ஹர்தீன், ஜே.எம் மீடியா நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரஸா மல்ஹர்தீன் மற்றும் உறுப்பினர் முஹம்மத் முனாஸ் ஆகியோர் ஹிஸ்புல்லாஹ் தேசிய கல்லூரி அதிபர் ஜனாப் முனாப் அவர்களுக்கு வழங்கி வைத்தனர்.
மாவனல்லை ஜே.எம் மீடியா நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஜே.எம் மீடியா சமூக வேவை பிரிவு நாட்டிலுள்ள ஏணைய பாடசாலைகளுக்கும், தேவையுடைவர்களுக்குமான உதவிகள் பலவற்றை ஜாதி, இன, மத பேதங்களைத் தாண்டி எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கான பல திட்டங்களை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த நற்பணியில் இணைந்து பணிபுரிய விரும்பும் தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து கொள்ளலாம்.
மேலதிக தகவல்களுக்கு 0777362492
Masha allah
Jazakallah
Masha Allah
Jazakallah