விமல் வீரவன்ச 14 நாட்கள் உள்ளே…

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட இருவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சமந்த லொக்குஹென்னகேவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குகின்றார்.

அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைக்காக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image