துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வழக்கின் 1 ஆம், 3 ஆம், 7 ஆம், 10 ஆம் மற்றும் 11 ஆம் இலக்க பிரதிவாதிகளுகு இன்று மரண தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, அனுர துஷார டிமெல், தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படுகின்ற சமிந்த ரவி ஜயநாத், சரத் பண்டார, பிரியந்த ஜனக பண்டார ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பிரியந்த ஜனக பண்டார என்பவர் காணாமற்போயுள்ளமையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image