மீண்டும் கலக்கவருகிறது, வானொலிக்கு முன்மாதிரி ‘துதி FM’

புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு மாவனல்லை ஜே.எம் மீடியா கல்லூரி மாணவர்கள் வழங்கும் விஷேட  ‘துதி FM’ ஒலிபரப்பு இம்மாதம் நடைபெறவுள்ளது.
இன்ஷா அல்லாஹ் இம்மாதம்  10 மற்றும் 11ம் திகதிகளில், காலை 8 மணிமுதல் 103.1 FM அலைவரிசையில் மாவனல்லை மற்றும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களில் ஒலிபரப்பபடவுள்ளது.
மேலும், www.jmmedia.lk என்ற இணையத்தளத்திலும் JM MEDIA மொபைல் APP இலும் நேரடியாக செவிமடுக்கலாம்.
‘துதி FM’  நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து இணைந்திருப்பதன் மூலம், தங்கமோதிரம் வெல்லும் வாய்ப்பும் நேயர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மேலும் ‘துதி FM’ இல், கழகங்கள், அமைப்புக்களின் அறிமுக நிகழ்ச்சிகள், பாடசாலை நிகழ்ச்சிகள், ஹஜ் சிறப்புக் கலந்துரையாடல்கள், கஸீதாக்கள், சிறுவர் நிகழச்சிகள், கவிதை நிகழச்சிகள் என பலவகையான நிகழ்ச்சிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
வானொலிக்கு முன்மாதிரி ‘துதி FM’ என்றும் போல இம்முறையும் வானொலிக்கும் நேயர்களுக்குமிடையிலான இடைவெளியை குறைக்க பல நேரடி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கவுள்ளதால், அனைவரும் நேரடியாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புள்ளது.
நிகழ்ச்சிகளில் இணைந்துகொள்ள, நேரடிக் கலையக தொலைபேசி இலக்கம் 0777 165 511

Listen Online
www.jmmedia.lk or Download JM Media App : https://play.google.com/store/apps/details?id=com.jmmedia.radio&hl=en

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image