“Robotic Summit” பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்கரோபோ உருவாக்கல் போட்டி
SRILANKA ISLAMIC STUDENTS’ MOVEMENT ன் பாடசாலைப்பிரிவான Uplift Education Team Sri Lanka இனால் அகில இலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்கரோபோ உருவாக்கல் போட்டி நடைபெற்றிருந்தது. இதற்காக இணையத்தளம் மற்றும் தபால் மூலமாக திறந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
ஆகஸ்ட் மாதம் 13,14 ம் திகதிகளில் அக்குறணை அஸ்ஹர் பாடசாலையில் இடம் பெற்ற இப் போட்டியில் நாட்டின் பலபாகங்களிலும் இருந்து 20 பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன. ஒரு குழுவிற்குநால்வர் என்றடிப்படையில் இரண்டுநாட்கள் இடம் பெற்ற இப் போட்டியில்முதல் நாள் இயந்திரமொழிப் பயிற்சியும் Computer Programing இரண்டாம் நாள் ரோபோ உருவாக்கல் போட்டியும் இடம் பெற்றது.
போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு தங்கம்,வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பங்கு கொண்ட எல்லா பாடசாலைகளுக்கும் ரூ 5000 பெறுமதியான ரோபோ உருவாக்கத் தேவையான பொருட்கள் அடங்கியபரிசுப் பொதியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், புத்தி ஜீவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இப் போட்டிக்கான வளவார்களாக uplift education இன் தன்னார்வத் தொண்டர்களான அரச,தனியார் பல்லைக்கழக மற்றும் உயர் தர மாணவர்கள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைகள்,
Robotic Contest – Gold Winners
– Hamza College Colombo
Robotic Contest – Silver Winners
– Al Azhar C.C. Hemmathagama
Robotic Contest – Bronze Winners
– Al Ashraq N.S. Nintavur
Programming Contest – Gold Winners
– Al Ashraq N.S. Nintavur
Programming Contest – Silver Winners
– Baduriya C College Mawanella
Programming Contest – Bronze Winners
– Al Azhar C.C. Hemmathagama
இது போன்ற செயற்திட்டங்கள் முற்றிலும் இலவசமாக உங்கள் பாடசாலைகளிலும் நடாத்த விரும்பினால், அழையுங்கள் 0755595105/0766534031