சிரியா கொடூரங்களுக்கு மற்றுமொரு உதாரணமாகிய சிறுவன் (Video)

2011 ஆம் ஆண்டு ஆரம்பித்த உள்நாட்டுப் போர் காரணமாக இதுவரை 2.7 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இலட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக உள்ளனர்.

பெண்கள், குழந்தைகள் என்ற பேதமில்லாமல் உள்நாட்டுப் போரினால் மடிந்தவர்கள் ஏராளம்.

இந்நிலையில், சிரியாவின் அலெப்போ நகரில் விமானத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவன் இரத்த காயங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

4 அல்லது 5 வயது மதிக்கத்தக்க சிறுவனை சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தூக்கிச் சென்று அம்பியுலன்சில் ஏற்றி வைக்கும் காட்சியை CNN வெளியிட்டுள்ளது.

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படும் சிறுவனின் படம் சிரியாவில் நடக்கும் கொடூரங்களுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக உள்ளது.

https://www.facebook.com/JMmedia.lk/videos/648369981994327/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image