பொருளாதார அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பிற்கு முன்னுரிமை – ஜனாதிபதி

மறுசீரமைப்பை சக்திமயப்படுத்துவதற்கும், பொருளாதார அபிவிருத்திக்கும் நடப்பு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள யுனெஸ்கோவின் பணிப்பாளர் எரினா பொகோவாவை சந்தித்த வேளையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்று(17) குறித்த இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது, சுற்றாடல் பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பு தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதோடு, சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பூகோள நிகழ்ச்சி நிரலை அமுலாக்குவதற்கும், நேர்மையான அரசியலின் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக, எரினா பொகோவா மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *