பள்ளிவாசல் இமாமின் மகள்… உண்மைச்சம்பவம்.! இது இலங்கையில்

வெல்லம்பிடிய , பொல்வத்த மஸ்ஜிதுந் நூர் ஜுமுஆ மஸ்ஜிதில் குத்பா பிரசங்கம் நிகழ்த்துவதற்காக (12-08-2016) சென்றிருந்தேன், அங்கு கடந்த மூன்று வருடங்களாக பேஷ் இமாமாக கடமை புரிகின்ற சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட மௌலவி அலி அக்பர் அன்வாரி அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில் அவரது குடும்பத்தைப் பற்றி விசாரித்தேன் அப்போது அவர் பல விடயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டாலும், எனக்கு அதிர்ச்சியையும் புதுவித அனுபவத்தையும் வழங்கிய விடயத்தை மட்டும் நமது நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அது தனது மகள் ரிப்கா பாணு என்பவரின் எதிர்கால இலக்குப் பற்றியதே, க,பொ,த சாதரண தரப் பரீட்சையில் எட்டு A சித்திகளும் ஒரு B சித்தியுடன் விஞ்ஞானப்பிரிவை தெரிவு செய்து Advance Level கற்க ஆரம்பித்து கடந்த ஆண்டு விஞ்ஞானப்பிரிவில் க பொ த உயர்தரப் பரீட்சையில் தோற்றிய தனது மகள் ரிப்கா பாணு Physics பாடத்தில் A சித்தியும் Chemistry பாடத்தில் A சித்தியும் Biology பாடத்தில் B சித்தியும் பெற்று மிக இலகுவான முறையில் மருத்துவத்துறையில் பயில பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளார் என்ற செய்தியை மகிழ்வுடன் தெரிவித்தார்.

கடந்த 1984 ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சி அன்வாருல் உலூம் அரபுக்கல்லூரியில் மௌலவிப் பட்டம் பெற்றது முதல், இவர் இறை மாளிகையிலேயே கடமை புரிந்து தனது வாழ்நாளை கழித்து வருகிறார், தனது தளராத நம்பிக்கையினால் தனது மகள் ரிப்கா பாணுவை நல்ல முறையில் கல்வியூட்டி மருத்துவத்துறைக்கு அனுப்பி அவள் ஒரு பெண் மகப்பேற்று நிபுணராக ( VOG ) வேண்டுமென்ற தனது கனவையும் தனது மகளது உறுதியான இலக்கையும் கூறி முடித்தார்.

பள்ளிவாசல்களில் கடமை புரிகின்ற இன்றைய இமாம்களுக்கு பத்தாயிரமோ, பதினையாயிரமோ ஊதியமாக வழங்கப்படுகின்ற போதிலும் தனது கனவில் உறுதியாக நின்று போராடிக் கொண்டிருக்கும் மௌலவி அலி அக்பர் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

அல்லாஹ் அவரது கனவை நனவாக்கி அந்த மாணவியை எதிர்கால பெண் வைத்திய நிபுணாராக்கி சமூகத்துக்கு தொண்டாற்றி முன்னுதாரணமிக்க வைத்தியராக மிளிரச் செய்வானாக. .!!

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image