இலங்கைக்கான நான்கு நாடுகளுகளின் புதிய தூதுவர்கள் நியமிப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான நான்கு நாடுகளுகளின் புதிய தூதுவர்கள் நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் தமது நியமனக் கடிதங்களைக் கையளித்தனர்.

நாட்டிலிருந்து வறுமையை ஒழிப்பதும் அபிவிருத்தியை அடைந்துகொள்வதுமே இலங்கையின் கொள்கை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதுவே நாட்டில் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கான வழி என்றும் புதிய தூதுவர்களின் மத்தியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை உலகில் உள்ள எல்லா நாடுகளுடனும் நட்புறவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் எல்லா நல்ல விடயங்களையும் எமது மக்களுக்க வழங்குவது எமது நோக்கமாகும் என்றும் இதன்போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *