பெண்மையை இழந்த பின் சிந்தித்துப் பயனுன்டா?

03 நாட்கள் கெகிராவ நோக்கிய எங்கள் பயணத்தின் இறுதி நாளாகிய நேற்று காலைச் சாப்பாட்டு வேளை முடிய சுற்றத்தாருடன் கெகிராவையிலுள்ள பிரசித்தி பெற்ற பொய்கை ஒன்றுக்கு விஜயம் செய்தோம்.
எங்கும் முஸ்லிம் பெண்கள் அத் திறந்த வெளியில் குளித்துக் கொண்டிருந்த காட்சி எங்களை சங்கடப் படுத்தின.
நாங்கள் ஏதும் தெரியா சின்ன வயதில் கூட இவ்வாறு திறந்த வெளியில் குளித்ததில்லை, தந்தை எங்களை அழைத்துச் சென்று ஆடையுடன் விளையாட வைத்துக் கூட்டி வந்ததே நான் அறிந்த உண்மை.

ஆனால் இங்கு இப்படி எவ்விதக் கூச்சமுமின்றி ஆண்களுக்கு மத்தியிலும் சிரித்துக் கொண்டே குளிக்கும் அப் பெண்களை விட்டு வேறு இடம் போகலாம் என எங்கள் ஆண் சகோதரர்கள் எம்மை அழைத்து வந்தாலும் அவர்களுடனான கவலை என்னை விட்டுப் பிரிந்து போகவில்லை..

இஸ்லாம் பெண்களுக்கு இப்படி திறந்த வெளியில் குளிக்க அனுமதி வழங்கியுள்ளதா? என்று பார்க்கும் விடத்து “பெண்களின் முகத்தையும் கைகள் இரண்டையும் தவிர அவளது உடம்பில் ஏனைய அனைத்துப் பகுதிகளும் கட்டாயம் மறைக்கப் பட வேண்டும்” என்பதே இஸ்லாமிய நிலைப்பாடு.

“ஆதமுடைய மக்களே! உங்கள் மானத்தை மறைக்கக் கூடிய ஆடையையும், அலங்காரத்தையும் நாம் உங்களுக்கு அருள் புரிகின்றோம்”(7:26) என்று அல்குர்ஆன் பேசிகிறது.

பெண்களின் உடல் பருமனை பிரதிபலித்துக் காட்டும், பிற ஆடவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் ஆடைகளுக்கு இஸ்லாத்தில் என்றும் இடம் இல்லை,

பெண்களின் ஒரு தலைமயிர் கூட வெளியில் தெரியக் கூடாது என அடித்துச் சொல்லும் இஸ்லாம் இங்கனம் திறந்த வெளியில் குளிக்க அனுமதிக்குமா???

பிறகு கற்பழிப்பு போன்ற சமூக சீர் கேடுகள் தலை தூக்க ஆரம்பிக்கும், பெண்மையை இழந்த பின் சிந்தித்துப் பயனுன்டா?

பெண் சமூகமே!! நாம் இவ்வாறு திறந்த வெளியில் குளிப்பதால் எங்களின் அவ்ரத்(மறைக்க வேண்டியவை) எதுவும் மறைக்கப் படுவதில்லை, எங்களின் இந்த நிலையால் தெரிந்தோ, தெரியாமலோ எம் பக்கம் கவனம் ஈர்க்கப் படும் அத்துனை ஆண் சகோதரர்களது பாவத்தையும் நாளை நாங்களே சுமக்க வேண்டி வரும்.

நபியவர்களின் மிஹ்ராஜ் பயணத்தின் போது நரகில் அதிகமான பெண்களைக் கண்டதாகக் கூறினாரே? அது இன்று இவ்வாறான பெண்களால் உண்மைப் படுத்தப் படுகின்றதல்லவா??

நாங்கள் ஆண்களுக்கு சமமானவர்களல்ல, அவர்களின் நிலைக்கு ஒப்புமைக்கப் பட்டு எங்கள் பெண்மையை இழந்து கொள்வோமானால் இவ் உலகிலும் அவப் பெயர், மறுமையிலும் இழிவு படுத்தப்படுவோம்.

நாணம், பயம், வெக்கம் எல்லாம் ஒட்டிப் பிறந்த எங்களை பிற ஆடவர்கள் இரசித்துப் பார்க்க வழி வைப்போம் ஆயின் பெண்கள் என்ற தானத்தை நாம் நிச்சயம் இழந்து விடுவோம்.

எனவே நான்கு சுவர்களுக்குள் கணவனுக்கு மட்டுமான எங்கள் அழகுக்கு விலை பேசி விடாதீர்கள். இஸ்லாம் எங்களுக்கு தந்துள்ள உரிமைகளை இவ்வாறு துஷ்பிரயோகப் படுத்தாதீர்கள்.
அவ்ரத் என்றால் என்னவென்று புரிந்து கொள்ளுங்கள், உங்களையும் பாவியாக்கி, பிறரையும் பாவத்தின் பக்கம் இழுக்காதீர்கள்.

மீண்டும் சொல்கிறேன் எங்களின் ஒவ்வொரு அங்கங்களும் மறைக்கப் பட வேண்டியவையே!!
அனைத்தையும் அறிந்த அல்லாஹ் எம் அனைவரையும் தீமையின் புறத்திலிருந்து பாதுகாப்பானாக!

-Aathifa Ashraf-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image