முஸ்லிம் அரச ஊழியர்களுக்கும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு விஷேட விடுமுறை

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு விஷேட விடுமுறையை வழங்குமாறு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதற்கமைய அதிகாலை 3.30 – காலை 6.00 மணி, பிற்பகல் 3.15 – மாலை 4.15 மணி, மாலை 6.00 மணி – இரவு 07.00 மணி, இரவு 07.30 – இரவு 10.30 மணி வரையுமான காலப் பகுதிகளில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு விஷேட விடுமுறையை வழங்குமாறு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கை அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(riz)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image