மலேசியா மெகா டெக் சர்வதேச கல்லூரிக்கும் மட்டக்களப்பு கெம்பஸுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

மலேசியா மெகா டெக்சர்வதேச கல்லூரிக்கும் மட்டக்களப்பு கெம்பஸுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மலேசிய தலைநகரில் கோலாலம்பூரில் கைச்சாத்திடப்பட்டது.

மட்டக்களப்பிலே அமைக்கப்படுகின்ற மட்டக்களப்பு கெம்பஸுக்கும், மலேசியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற மெகா டெக் சர்வதேச கல்லூரிக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்று மாலை மலேசிய கோலாலம்பூர் மெகா டெக் சர்வதேச கல்லூரியினுடைய தலைமையகத்தில் இடம்பெற்றது.

மலேசியாவிலே Electronic, megatronic,electrical போன்ற துறைகளில் பட்டமளிக்கின்ற மிகப் பெரும் இக்கல்லூரி மட்டக்களப்பு கெம்பஸுடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது. இதன் மூலமாக மட்டக்களப்பு கெம்பஸ் எதிர்வரும் 2017 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ள பொறியியல் துறையோடு சம்பந்தப்பட்ட மேற்படி துறைகளான அனுபவங்களையும், தேவையான ஆசிரியர்களையும், ஆலோசனைகளையும்,உபகரணங்களையும் வழங்க மேற்படி கல்லூரி இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்து மெகா டெக் கல்லூரியின் சார்பில் அதன் தலைவர் டொக்டர் டட்டு டி மோகன் அவர்களும், டொக்டர் முருகன் சன்டயன் அவர்களும், மட்டக்களப்பு கெம்பஸ் சார்பில் இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்களும் பேராசிரியர் டாக்டர் S.M. இஸ்மாயில் அவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இதன் மூலம் மட்டக்களப்பு கெம்பஸிலே கல்வி கற்கின்ற மாணவர்கள் தங்களுக்குத் தேவையான அனுபவங்கள் மற்றும் தகவல்களை சர்வதேச மெகா டெக்ஸ் கல்லூரியில் பெற்றுக் கொள்ள முடியும். அதே போன்று மெகா டெக் சர்வதேச கல்லூரி மாணவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து மட்டக்களப்பு கெம்பஸினுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையிலான முறையில் அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image